
பாஸ்வேர்ட் என்றழைக்கப்படும் கடவுச்சொல்…வாழ்க்கையில் பலதரப்பட்ட இடங்களிலும் இணையமயமாகிவிட்ட நிலையில், ஒருவர் பல கடவுச்சொற்களைப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
கடவுச்சொல்லை பயன்படுத்துவதே பாதுகாப்பு என்பதற்கு தான் என்பதை மறந்து, ஞாபக மறதி காரணமாக பலரும் எளிதான பாஸ்வேர்டையே வைத்துக் கொள்கிறோம்.
மின் கட்டணம் செலுத்துவது முதல் வங்கிப் பணப்பரிவர்த்தனை செயலிகள் என பலவற்றுக்கும் பல விதமான பாஸ்வோர்டுகளை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் அவசியமும் உள்ளது.
மின் கட்டண கணக்குக்கு நாம் வைக்கும் கடவுச்சொல் வேண்டுமானால் பலவீனமாக இருக்கலாம். ஆனால், வங்கிக் கணக்கு, பணப்பரிமாற்ற செயலிகளுக்கு வைக்கும் கடவுச்சொற்கள் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாத வகையில் அமைப்பது அவசியம்.
ஆனால், பலரும் எளிமையாக மிக எளிமையாக, மிக மிக எளிமையாக கடவுச்சொற்களை வைப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அது தவறு என்றாலும் வேறு வழி இல்லாமல்தான் அப்படி பயன்படுத்துகிறோம்.
இங்கே, உலகளவில் அதிகமான நபர்களால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவற்றில் உங்களுடையதும் இருக்கிறதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், அவை ஒரு சில நொடிகளில் ஹேக் செய்யப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஏற்கனவே இதில் ஒன்றை பயன்படுத்தி தற்போது மாற்றியிருந்தால் சந்தோஷம் கொள்ளுங்கள்.
பாஸ்வேர்ட் (password)
123456
123456789
12345678
123456789
01234567
qwerty
abc123
xxx
Iloveyou
krishna
123123
abcd1234
password1
welcome654321
qwerty123
passw0rd
monday
monkey
mother
Father
Sister
555555
இதில், உங்களுடைய பெயர், பிறந்த தேதி, திருமண நாள், பிள்ளையின் பெயர், பிள்ளையின் பிறந்த தேதிகளை நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அவற்றையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் என்பது தான் குறிப்பிடத்தக்கது.
Very good post. I will be dealing with a few of these issues as
well..