Saving account மற்றும் Current account என ஒரு நபர் ஒன்றுக்கும் அதிகமான வங்கி கணக்குகளை வைத்திருப்பது பல நேரங்களில் நமக்கு உதவிகரமாக இருந்தாலும் ஒரு சில நேரங்களில் நமக்கு பாதகமாக அமையும்.
அப்படி பாதகமாக அமையும் இடங்களை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தற்போது உள்ள சூழ்நிலையில் ஒருவருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஒன்றுக்கு அதிகமான கணக்குகளை வைத்திருப்பது நல்லது தான் என்றாலும் அதில் உள்ள சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல விதமான சேவைகளையும், சலுகைகளையும் வழங்குகின்றன.அவற்றில் பல சேவைகள் இலவசமாகவும், சில சேவைகளுக்கு குறிப்பிட்ட அளவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகளில் வழங்கப்படும் சலுகைகள்…
Amazon, Flipkart போன்ற ஷாப்பிங் நிறுவனங்களின் செயலிகளில் ஒரு சில வங்கிகளின் கணக்குகளுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.அதிக சலுகைகள் கிடைக்கும் வங்கி கணக்குகளை பயன்படுத்துவது உங்களுக்கு லாபகரமாக அமையும்.
பயன்படுத்தாமல் இருக்கும் வங்கி கணக்குகளை மூடவும்…



நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் வங்கி கணக்குகளில் உள்ள சிறிய தொகைக்கும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.அப்படி வசூலிக்கும் கட்டணம் அதிகமான கணக்குகளில் பிடிக்கும் போது உங்களுடைய பாக்கெட்டில் இருந்து சில நூறு ரூபாய்களை இழக்க நேரிடும்.
பணம் எடுக்கும் அளவு…
ஒரு டெபிட் கார்டில் இவ்வளவு தான் பணத்தினை எடுக்க முடியும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும், அந்த அளவை விட அதிகமாக அதிகமாக பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் ஒன்றுக்கு அதிகமான டெபிட் கார்டுகளை வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.
குறைந்தபட்ச இருப்பு தொகை…
ஒவ்வொரு வங்கிகளுகும் ஏற்ப இந்த குறைந்தபட்ச இருப்பு தொகை மாறுபடும்.மேலும் உங்களுடைய Branch இருப்பது நகரமா அல்லது கிராமமா என்பதை பொருத்து அமையும்.
குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் வங்கிகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கு பதிலாக தேவையில்லாத கணக்குகளை மூடிவிடலாம்.
பாஸ்வேர்டுகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சிரமம்…
அதிகமாக வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருப்பது ஒவ்வொரு கார்டின் PIN (Personal identification number) தான்.
ஒரு நபர் எத்தனை வங்கி கணக்குகளை வைத்துக்கொள்ள முடியும்?
ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் அந்த வங்கி கணக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும்.இல்லையெனில் அந்த கணக்குகளை செயலற்ற கணக்குகளாக மாற்றி விடுவார்கள்.