இந்திய ரிசர்வ் வங்கி 2023-ஆம் நிதியாண்டில் விதிகளை மீறி செயல்பட்டதிற்காக 7 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள் நகர்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப் புறங்களிலும் தங்களது வங்கி சேவைகளை வழங்குகின்றனர்.கடுமையான கட்டுப்பாடு, மோசமான பொருளாதார நிலை, உள்ளூர் அரசியல், பண புழக்கம் குறைவு போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகள் காரணமாக கூட்டுறவு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
போதிய பண வரவு மற்றும் சில விதிமுறை மீறல்கள் காரணமாக இந்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்படுகிறது.மேலும் சில வங்கிகளுக்கு கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு வங்கி திவாலானாலோ அல்லது ரிசர்வ் வங்கி தரப்பில் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டாலோ, வாடிக்கையாளர்கள் டெபாசிட் வைத்திருக்கும் ரூ.5 இலட்சம் வரையிலான பணத்திற்கு எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது.அதற்கு மேல் இருக்கும் டெபாசிட்களுக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது.
இந்திய ரிசர்வ் வங்கியால் உரிமம் ரத்து செய்யப்பட்ட வங்கிகள்:
- சேவா விகான் கூட்டுறவு வங்கி
- டெக்கான் நகர கூட்டுறவு வங்கி
- மிலாட் கூட்டுறவு வங்கி
- முதோல் கூட்டுறவு வங்கி
- ஆனந்த் கூட்டுறவு வங்கி
- பாபாஜி தேதி மகிளா அர்பன் வங்கி
- லட்சுமி கூட்டுறவு வங்கி