தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த சூரரைப்போற்று திரைப்படம்…Sooraraippottru movie which collected national awards

siva

இன்று 68-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சூரரைப்போற்று திரைப்படம் தேசிய விருதுகளை அள்ளி குவித்து உள்ளது.இதனையறிந்து சூரரைப்போற்று திரைப்பட குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோ.ரா.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு:

Soorarai pottru

கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட கோ.ரா.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை கொண்ட சிம்ளி ஃப்ளை (Simply fly) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

சூரரைப்போற்று Cast:

Soorarai pottru movie

இப்படத்தில் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிகர், நடிகையாகவும், ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் துணை நடிகர்களாகவும் நடித்திருந்தனர்.ஜீ.வி.பிரகாஷ் குமார் சிறந்த பின்னணி இசை கொடுத்திருந்தார்.மேலும் இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா-வின் 2D Entertainment தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

Soorarai pottru release:

12 நவம்பர் 2020 அன்று பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ இணையதளத்தில் வெளிவந்து அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.மேலும் ஒரே சமயத்தில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியானது.

IMDB-யில் அதிக ரேட்டிங்:

பிரபல Movie Review Rating இணையதளமான IMDB-யில் 9.1 ரேட்டிங் பெற்று வெளிவந்த தமிழ்ப்படங்களில் முதல் இடத்தை பிடித்தது.

சூரரைப்போற்று திரைப்படம் பெற்ற தேசிய விருதுகள்:

Soorarai pottru

சூரரைப் போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகர் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோருக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்கும், சிறந்த இசை கொடுத்ததற்காக G.V.Prakas kumar-க்கும், சிறந்த திரைக்கதைக்கு ஷாலினி உஷா நாயருக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த திரைப்படமாகவும் சூரரைப்போற்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

மொத்தமாக ஐந்து பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாட்டம்:

நாளை சூர்யா தனது 47-வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இந்த விருதுகள் அவருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் சிறந்த பரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x