முற்றிலும் இந்திய தயாரிப்பிலே உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்தின் சிறப்பு அம்சங்கள்…Special Features of INS Vikrant Fully Made in India…

siva

உலகிலேயே விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கும் நாடுகள் United States of America, United Kingdom, Chinna, Russia, France ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வைத்துள்ளன.

ஆனால் முழுக்க முழுக்க உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மூலம் அந்த நாடுகளுடன் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

Ins என்பதற்கு Indian Navy ship என்று அர்த்தம்.

2007-ஆம் ஆண்டு விக்ராந்தின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 2021-ல் முடிக்கப்பட்டு, நான்கு கட்டங்களாக சோதனை ஓட்டத்தையும் நிறைவு செய்த நிலையில் செப்டம்பர் 2, 2022 அன்று இந்த நாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது.

பழைய ஐ.என்.எஸ் விக்ராந்த்:

ஏற்கனவே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்தியாவிடம் இருந்தது.அதன் பெயரும் ஐ.என்.எஸ் விக்ராந்த் தான்.அதனை முதலில் உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ் காரர்கள், ஆனால் அதனுடைய செலவுகள் அதிகமாக இருந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.பின்னர் இந்தியா கைப்பற்றி மீதமிருந்த வேலைகளை முடித்து இந்திய இராணுத்தில் இருந்தது‌.

1970-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்ப்பட்ட போரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாகவும், அதன் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது பழைய ஐ.என்.எஸ் விக்ராந்த்.

அந்த போர் முடிந்த நிலையில் அப்போதைய கப்பற்படை தளபதியால் இந்தியாவுக்கு மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போதைய ஐ.என்.எஸ் விக்ராந்தின் சிறப்பம்சங்கள்:

Ins vikrant, indiageos Navy ship, ins vikrant ship

இது 20,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட இதன் எடை 44,000 டன் மற்றும் 21,000 டன் எடை கொண்ட ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதில் உள்ள ஸ்டீல் களை கொண்டு நான்கு Eiffel Tower-களை உருவாக்க முடியுமாம்.

மேலும் மிக் 29-கே ரக விமானங்கள் உட்பட 30 போர் விமானங்களை இயக்கும் வல்லமை கொண்டது.

இது 860 அடி நீளமும் 203 அடி அகலமும் மற்றும் 59 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

7,500 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.2450 கிலோமீட்டர் நீளமுள்ள கேபிள்கள் இந்த போர்க்கப்பலில் பயன்படுத்தி உள்ளனர்.

இந்த கப்பலில் 15 அடுக்குகளும், பணியாளர்கள் உட்பட 1800 பேர் தங்கும் வசதியும், 16 படுக்கை வசதி கொண்ட உயர்தர மருத்துவ மனையில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளது.

இந்த போர்க் கப்பலினால் கடலில் 50 km/h வேகத்தில் செல்லமுடியும்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x