Indian Railways 8 Hours Sleeper Coach Berth Rule:
இந்திய இரயில்களில் பொதுவாக அதிகம் புக் செய்யப்படுவது இந்த ஸ்லீப்பர் கோச் தான்.ஏனெனில் இதன் டிக்கெட் விலையும் குறைவு.இந்த கோச்சில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இந்திய இரயில்வேயில் வகுக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் இயங்கும் இரயில்களில் இது போன்ற விதிகள் இருப்பது பலருக்கு தெரியாது.இந்த செய்தியில் இந்திய இரயில்வேயில் என்னென்ன விதிமுறைகள் உள்ளது என்று பார்ப்போம்.
நீங்கள் இரயில்களில் பயணித்திருந்தால் இரவு நேரத்தில் லைட் ஆன் செய்து வைத்திருப்பது, மற்றவர்களுக்கு தொந்தரவு தரும்படி சத்தமாக பாடல் வைத்து கேட்பது, சத்தமாக பேசுவது என உங்களை தூங்கவிடாமல் சிலர் செய்திருக்கலாம்.ஆனால் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் இனி இரவில் ரயில்களில் பயணிக்கும் போது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
1.இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதனைக்கு தடை:
இரவு 10 மணிக்கு மேல் ரயில்களில் ஏறும் பயணிகளை மட்டுமே டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்யவேண்டும்.ஏற்கனவே பரிசோதனை செய்த பயணியை தொந்தரவு செய்ய கூடாது.
2. இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை அணைக்க வேண்டும்:
இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை ஆஃப் செய்ய வேண்டும்.அதற்கு மேல் ஃபைட் லேம்ப் களை பயன்படுத்தி கொள்ளலாம்.சக பயணியை தொந்தரவு செய்யும் படி லைட்களை ஆன் செய்து வைத்திருப்பது இந்திய இரயில்வே விதிகளின் படி குற்றமாகும்.
3. சத்தமாக பேசுவது குற்றமாகும்:
இரவில் குழுவாக ஏறும் நபர்கள் மற்ற பயணிகளின் தூக்கத்தை கெடுக்கும் படி நடந்து கொண்டால் அது குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்யலாம்.
4. மிடில் பெர்த் உரிமை(10:00pm to 06:00am):
ஸ்லீப்பர் கோச்சில் பயணிக்கும் போது Lower birth மற்றும் Middle birth பயணிகளில் யாராவது ஒருவர் இரவு 10 மணிக்கு மேல் தூங்க வேண்டும் என நினைத்தால் அவரவர் படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும்.எந்த பயணியும் மற்ற பயணியை தொந்தரவு செய்ய கூடாது.
5. இரவு 10 மணிக்கு மேல் இ-கேட்டரிங் உணவுகளை டெலிவரி செய்ய தடை:
தற்போது இ-கேட்டரிங் மூலம் இரயில்களில் உணவு வழங்கும் வசதி உள்ளது.இவை இரவு 10 மணிக்கு மேல் உணவு டெலிவரி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.