WhatsApp-ல் பலரும் எதிர்பார்த்த புதிய அம்சம் வர உள்ளது!!! என்ன அம்சம் தெரியுமா?

siva

Whatsapp செயலி உலகம் முழுவதும் 5 பில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது.வாட்சப் தங்களது பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அம்சங்களை வாரி வழங்கி வருகிறது.அப்போது தான் மார்க்கெட்டில் உள்ள மற்ற செயலியில் இருந்து தங்கள் பயனர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

என்னதான் பல அம்சங்கள் வாட்சப்பில் கொண்டு வந்தாலும் நாம் ஒரு சில சமயம் செய்யும் தவறான மெசேஜ்-களை எடிட் செய்யும் வசதி இல்லை.

இதனால் தவறாக அனுப்பிய செய்தியை டெலிட் செய்து மீண்டும் டைப் செய்து அனுப்பும் நிலை உள்ளது.இதனால் பலருக்கும் நேர விரையம் ஏற்படுகிறது.

இனி இந்த பிரச்சனை இருக்காது! ஏன் தெரியுமா? வாட்சாப் நிறுவனம் பீட்டா செயலியில், அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியை சோதனை செய்து வருகிறது.

கூடிய விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறதலும் எடிட் செய்யப்பட்ட மெசேஜ் மேலே Edited என்ற லேபிள் மூலம் குறிக்கப்படும்.இது ஏற்கனவே forwarded மற்றும் Many times forwarded எனும் அம்சங்களை போன்று இருக்கும்.

இந்த வாட்சாப் அப்டேட் கூடிய விரைவில் WhatsApp நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x