ஆம்னி பேருந்துகள் ஏன் பகல் நேரங்களை காட்டிலும் இரவு நேரங்களில் அதிகமாக இயக்கப்படுகிறது…காரணம் தெரியுமா?

siva

நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் மனதில் வந்திருக்கும் இதில் பலருக்கும் அதற்கான விடை தெரியாது.சிலருக்கு தெரிந்திருக்கும்.

ஆம்னி பேருந்துகள் ஏன் அதிகமாக இரவில் இயக்கப்படுகிறது? இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா?

இப்படி இரவில் இயக்கப்படுவதால் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கும் ஏதேனும் இலாபம் இருக்கிறதா? என்று தான்!

இரவில் ஆம்னி பேருந்துகள் அதிகமாக இயக்குவதற்கான காரணங்களை பார்ப்போம்.

ஆம்னி பேருந்துகள் சென்னை போன்ற மாநிலத்தின் தலைநகரில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.இதே போல் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் இயக்கப்படுகிறது.

நீங்கள் சென்னையில் வேலை செய்துவந்தால் பெருங்களத்தூரிலும், பெங்களூரில் வேலை செய்தால் சில்க் போர்டிலும் இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதை பார்க்கலாம்.

பெரிய நிறுவனங்கள் மட்டுமே பகலில் ஆம்னி பஸ்களை இயக்குகின்றன.அதுவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் இயக்குகின்றனர்.புதிதாக ஆரம்பித்த நிறுவனங்களும் அல்லது குறைந்த பேருந்துகளை இயக்கும் ஆம்னி நிறுவனங்கள் பகலில் இயக்குவதில்லை.

இப்படி பகலில் அதிகமாக இயக்காததற்கு காரணம் நாம் தான்… ஏனெனில் பெரும்பாலும் நாம் பகலில் வேலை செய்து முடித்துவிட்டு இரவில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வோம்.இரவு ஏறினால் காலை விடியும் போது ஊருக்கு சென்றுவிடலாம்.மேலும் பெரும்பாலானோர் பகல் நேரங்களில் பயணிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.

பகலில் சென்றால் அந்த நாள் முழுவதும் பேருந்திலே சென்றுவிடும்.

பயண நேரம் குறையும்

பகல் நேரங்களில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.இரவு நேரங்களில் வாகன நெரிசல் இருக்காது.

எரிபொருள் சேமிப்பு

இரவில் வாகன நெரிசல் இருக்காது எனவே எரிபொருள் மிச்சமாகும்.

பஸ் பராமரிப்பு

இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும், பகல் நேரங்களில் பஸ்ஸில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் பழுது நீக்கப்படும்.

இந்த காரணங்களால் ஆம்னி பஸ்களுக்கு பகலை விட இரவில் அதிக இலாபம் கிடைக்கும்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x