சமூக வலைதளங்களில் அதிகமான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் செயலில் முதல் இடத்தில் இருப்பது வாட்ஸ்அப்.இந்த செயலி மார்க்கெட்டில் நிலவும் போட்டியில் தங்களுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும், பயனர்களை திருப்தி படுத்தவும் அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு அம்சத்தை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட அப்டேட்டில் ‘வியூவ் ஒன்ஸ்’ (View Once) என்ற புதிய வசதி கொண்டுவரப்பட்டது.
இந்த வசதி வந்தவுடன் பயனர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டது.அதில் வியூவ் ஒன்ஸ் முறையில் அனுப்பப்படும் புகைப்படம், வாய்ஸ் மெசேஜ் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை ஒரு முறை பார்த்தவுடன் டெலிட் ஆகிவிடும், கேலரியிலும் சேமிக்கப்படாது.ஆனால் பயனர்கள் பலர் இந்த முறையில் வரும் புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க ஆரம்பித்தனர்.எனவே இந்த வசதிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
இதனை கண்டறிந்த வாட்சப் நிறுவனம் அடுத்ததாக வரக்கூடிய அப்டேட்டில் View Once முறையில் அனுப்பக்கூடிய புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாதவாறு அப்டேட் கொண்டுவர உள்ளது.
இந்த அப்டேட் பீட்டா பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஒரு சில வாரங்களில் அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என வாட்சப்பின் தாய் நிறுவனமான Meta அறிவித்துள்ளது.