யூடியூப் மூலம் 7 இலட்சம் பேருக்கும் அதிகமாக நபர்களுக்கு கிடைத்த வேலைவாய்ப்பு…

0
69
யூடியூப் மூலம் 7 இலட்சம் பேருக்கு அதிகமாக கிடைத்த வேலைவாய்ப்பு, YouTube, how to create new YouTube channel

அதிகப்படியான மக்கள் Google தேடுபொறிக்கு அடுத்தபடியாக YouTube தான் பயன்படுத்துகிறார்கள்.இந்நிலையில் கடந்த 2021 ல் உலக அளவில் $28.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது யூடியூப் நிறுவனம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் வீட்டுக்கு வீடு வாசல் படி என்பது போல வீட்டுக்கு வீடு யூடியூப் சேனல் உருவாகியுள்ளது.அதிலும் தற்போது யூடியூப்பில் 30 செகண்ட் ஓடக்கூடிய Shorts எனும் அம்சம் வந்ததிலிருந்து ஆளுக்கு ஆள் YouTube channel ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி Steve Chen, Chad Hurley மற்றும் Jawed Karim ஆகிய மூன்று நபர்களால் துவங்கப்பட்டது தான் யூடியூப் தளம்.

இதனை கூகுள் நிறுவனம் 2006-ல் $1.65 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.ஆனால் தற்போது அந்த யூடியூப் மூலம் ஆண்டொன்றுக்கு 26 மடங்கு இலாபம் பார்த்து வருகிறது கூகுள் நிறுவனம்.வாங்கிய அன்று முதல் பல ஏற்றங்களை கண்டு தற்போது வீடியோக்கள் என்றாலே ‘யூடியூப்’ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

யூடியூப் மூலம் 7 இலட்சம் பேருக்கு அதிகமாக கிடைத்த வேலைவாய்ப்பு, YouTube channel, how to create new YouTube channel, how to create YouTube channel

ஆரம்பித்த சில வருடங்கள் குறிப்பிட்ட சில வீடியோக்களை அப்லோடு செய்வதற்காக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் 2016 க்கு முன்பு வரை இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை கைவிட்டு என்னும் அளவிற்கு தான் இருந்தது.ஜியோவின் வருகைக்கு பின் இன்டர்நெட் பயன்பாடு மிகப் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்தது.

அதன்பிறகு கொரோனா பெருந்தொற்றால் பலரும் வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடந்த போது மேலும் பல யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டன.அந்த நேரத்தில் Entertainment மற்றும் Food சேனல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.பலருக்கு அதன்பிறகு யூடியூப் முழு நேர வேலையாக மாறியது.

இந்நிலையில் YouTube நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன் இதில் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

யூடியூப் மூலம் 7 இலட்சம் பேருக்கு கிடைத்த வேலைவாய்ப்பு:

உலகம் முழுவதும் என்ன நடந்தாலும், யார் வீடியோக்களை அப்லோடு செய்தாலும் அவர்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்திருந்தால் போதும் ஒரு நொடியில் நமக்கு அந்த வீடியோவை காண்பிக்கும்.

இந்த சூழலில் இந்தியாவில் 7 இலட்சம் பேருக்கு மேல் வேலை கிடைத்துள்ளதாக யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் யூடியூப் சேனல்களில் தவறான தகவல் மற்றும் மக்கள் வெறுக்கும் வகைகள் உள்ள வீடியோக்களை அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

  அரிசி ஆலைகள் 25 கிலோ அரிசி மூட்டைகளை ஏன் 26 கிலோவாக மாற்றி உள்ளனர்...why rice mills, rice bag weight changed 25kg to 26kg!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here