பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

0
64
Ponniyin Selvan - 2, Ponniyin Selvan 2 release date, ponniyin Selvan 2 release date announced, ponniyin Selvan - 2

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவாகி இந்த ஆண்டு பெரு வெற்றி அடைந்த பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லைக்கா நிறுவனம் அறிவிப்பு :

தமிழ் சினிமாவின் கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்ட, பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.

மணிரத்தினம் இயக்கத்தில், மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்த படம் உலக அளவில் 400 கோடிகளுக்கும் மேல் வசூலை வாரி குவித்தது.2022 ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன்-1 தட்டிச் சென்றது.

தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை, ஒரு வீடியோவுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

அதாவது, சோழர்கள் வருகிறார்கள் புது வீடியோவை வெளியிட்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம், 2023ம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தற்போது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

  வாரிசு - துணிவு ஒரே நாளில் ரிலீஸ்... அரசுக்கு கோரிக்கை வைத்த திரையரங்க உரிமையாளர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here