Soorarai pottru

சூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வு – படக்குழு மகிழ்ச்சி

சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு:

இந்த படத்தில் சூர்யா நடிகராகவும், அபர்ணா பாலமுரளி நடிகையாகவும் நடித்திருந்தனர்.

மணிரத்னம் அவர்களிடம் Associate director ஆக 7 வருடம் பணியாற்றிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கி இருந்தார்.இவர் இறுதிசுற்று படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் G.V.Prakash சிறந்த பின்னணி இசை அமைத்து கொடுத்திருந்தார்.படத்தை சூர்யா மற்றும் குணீத் மோங்கா சேர்ந்து தயாரித்து இருந்தனர்.

உண்மை கதை:

கார்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் பிறந்த Air Deccan நிறுவனர் Captain Gopinath அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இவர் மலிவு விலையில் மக்களுக்கு விமான டிக்கெட்டுகள் கொடுக்க விரும்பினார்.

கோபிநாத் அவர்களின் Simply fly புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட Soorarai pottru படம் தமிழில் 2020 வெளியான படங்களில் முதல் இடத்தை பிடித்தது.

படம் வெளியான தேதி:

நவம்பர் 12, 2020 Amazon OTT ல் தமிழில் வெளியான சூரரைப்போற்று அதே நேரத்தில் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் dubbing செய்யப்பட்டு ஆன்லைனில் வெளியானது.

மேலும் படிக்க: Google CEO announces 10 billion dollars invest in india

இந்தியாவில் OTT ல் வெளியான படங்களில் அதிக பார்வைகள் பார்க்கப்பட்ட தமிழ் படம் என்ற பெருமை கிடைத்தது.மேலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது.

இந்தியாவில் 2020 ல் தேடப்பட்ட ஹேஸ்டேக்குகளில் (Hashtags) இரண்டாவது இடத்தைப் பிடித்தது சூரரைப்போற்று.

“நீ ஜெயிச்சிட்ட மாரா”

சூரரைப்போற்று

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆஸ்கருக்கு படங்களை தேர்வு செய்வதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.பொதுவாக தியேட்டரில் வெளியாகும் படங்கள் மட்டுமே ஆஸ்கர் Nomination க்கு செல்லும்.

கொரோனா நோய் தொற்றுகாரணமாக OTT ல் வெளியான சூரரைப்போற்று ஆஸ்கார் விருதுக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய நான்கு Category ல் Oscar விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Soorarai pottru

படத்தின் இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் சிறந்த பின்னணி இசை category ல் Soorarai pottru தேர்வாகி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவரது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Soorarai pottru Oscar screening ல் போட்டு பார்த்து ஆஸ்கர் Members படத்தை எந்த category ல் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வார்கள்.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், மக்களின் மனதை வென்ற படம் Oscar selection Members ன் மனதையும் வெல்லும் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சூரரைப்போற்று 78th Golden Clobe award க்கு nomination செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் என் கண்களில் நீர் வர வைத்த காட்சி நெடுமாறன் ராஜாங்கமின் (Surya) அப்பா இறப்புக்கு விமானத்தில் செல்ல டிக்கெட் எடுக்க பணம் குறைவாக இருக்கும் நிலையில் மற்ற சக பயணிகளிடம் கெஞ்சிய காட்சி மனதை உருக்கியது.

இப்படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம்: படத்தின் இறுதிவரை வெற்றிக்கான நெடுமாறன் ராஜாங்கத்தின் ஓட்டம்.

“we won Maara”

“நாம ஜெயிச்சிட்டோம் மாரா”

இப்படத்தை பற்றிய உங்களுடைய கருத்துகளை கீழே பதிவு செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *