Tamilnadu School Education | E-learn Online – தமிழில்

Tamilnadu school education website

Tamilnadu School Education E-learn Online website:

கொரோனா நோய் தொற்று காரணமாக 3 மாதங்களாகத் தமிழ்நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதற்குப் பல தரப்பில் எதிர்ப்புகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை E-learn.tnschools.gov.in இணைய தளத்தைத் துவங்கி உள்ளது.

How to use tamilnadu School Education E-learn website:

  • முதலில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை E-learn.tnschools.gov.in இணைய தளத்தில் செல்ல வேண்டும்.
TN E-learn website
  • அந்த இணையதளத்தில் வரும் முதல் பக்கத்தில் click here for content ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
E-learn online tamilnadu
  • பின்பு அடுத்ததாக வரும் பக்கத்தில் மூன்று கட்டம் இருக்கும் முதல் கட்டத்தில் (class) வகுப்பையும், இரண்டாவது கட்டத்தில் (medium) மொழியையும், மூன்றாவது கட்டத்தில் (subject) எந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமோ அதனைத் தேர்வு செய்து தேடல் (search) பட்டனை அழுத்தவும்.
  • அடுத்ததாகப் பாடப்புத்தின் (Topic) தலைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அந்தத் தலைப்பில் உள்ள யூடியூப் (youtube) வீடியோக்கள் அனைத்தும் வரும் அதில் எதைப் படிக்க வேண்டுமோ அதனை க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
  • வீடியோவை (Download) டவுன்லோடு செய்து பார்க்க வீடியோவில் தெரியும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தால் டவுன்லோடு option வரும் அதனை க்ளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்துள்ள வலைதளத்தைப் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பதிவை மாணவர்கள் பெற்று பயன்பெற மற்றவர்களுக்கும் (share) பகிர்ந்து அனைவருக்கும் தெரியுமாறு செய்யுங்கள்.

One thought on “Tamilnadu School Education | E-learn Online – தமிழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *