How to increase mobile battery life in Tamil:
தற்போது ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்றியமையாத தேவையாக மொபைல் மாறி உள்ளது.தினமும் நாம் அனைவருமே மொபைலை தான் அதிகமாக பயன்படுத்துகிறோம்.அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
சிலருக்கு மொபைல் இல்லையென்றால் பைத்தியமே பிடித்துவிடும்.அந்த அளவிற்கு ஒவ்வொருவருடைய வாழ்விலும் Mobile ஒன்றினைந்து உள்ளது.
மொபைல் பயன்படுத்துபவர்களில் சிலர் அவ்வப்போது புதிதாக மாடல் வெளிவரும்போது அதனை மாற்றி விடுவார்கள்.ஆனால் பலர் அதனை சில வருடங்களுக்கு வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.
அப்படி விரும்புபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது பேட்டரி தான்.ஏனென்றால் என்ன தான் நாம் மொபைலை பொத்தி பொத்தி வைத்துக் கொண்டாலும் அதன் பேட்டரியின் ஆயுள் குறைந்து விடும்.
இந்த செய்தியில் மொபைல் பேட்டரியின் வாழ்நாளை எப்படி அதிகரிக்கலாம் (increase mobile battery life in Tamil) என்பதை பார்ப்போம்.
பிரத்தியேக சார்ஜர் மற்றும் கேபிளை பயன்படுத்த வேண்டும் (A official charger and cable must be used):
மொபைலுக்கு என கொடுக்கப்படும் பிரத்தியேகமாக சார்ஜரை பயன்படுத்த வேண்டும். ஏன் தெரியுமா? ஒவ்வொரு போனும் அதனுடைய சார்ஜிங் வேகம் மற்றும் சார்ஜ் வைத்துக் கொள்ளும் திறன் போன்றவற்றால் மாறுபடும்.எனவே வேறு மொபைலுக்கு கொடுக்கப்படும் சார்ஜரை பயன்படுத்தினால் பேட்டரி அதிகமாக பாதிப்படையும்.
இரவு நேரத்தில் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும் (Avoid Nighttime charge):
பொதுவாக நாம் அனைவருமே செய்யக்கூடிய தவறு இரவு நேரங்களில் சார்ஜ் செய்வது. இரவு நேரத்தில் சார்ஜ் செய்வதால் பேட்டரி சேதமடைய வாய்ப்பு உள்ளது.
தற்போது வரும் சில மொபைல்களில் Optimized night charging எனும் ஒரு வசதி உள்ளது.இப்படி பட்ட வசதியுடன் வரும் மொபைல்களை இரவில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
Charging Cycle:
மொபைலில் இப்படி ஒரு அமைப்பு இருப்பதே பலருக்கு தெரியாது.அப்படி என்ன அமைப்பு என்றால் மொபைலை உருவாக்கும் போதே அதனுடைய Cycle – ஐ தீர்மானித்து விடுவார்கள்.நாம் ஒரு முறை 100% சார்ஜ் செய்தால் ஒரு Cycle முடிந்து விடும்.அதனால் முடிந்தவரை 100% மொபைலை சார்ஜ் செய்ய வேண்டாம்.
தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்கவும் (Uninstall unused Apps):
நமது மொபைலில் உள்ள நமக்கு உபயோகம் இல்லாத ஆப்ஸ்களை நீக்க வேண்டும்.
மேலும் தேவையில்லாமல் Background -ல் இயங்கும் ஆப்ஸ்-களை நிறுத்த வேண்டும்.
Turn off GPS, Wifi, Hotspot:
தேவையில்லாத நேரங்களில் மொபைலில் GPS, Wifi, hotspot போன்ற அம்சங்களை off செய்து வைக்க வேண்டும்.
Touch Vibration off:
மொபைலில் டச் செய்யும் போது Vibration ஆகும் வசதி இருந்து, அதனை நீங்கள் பயன்படுத்தினால் அந்த வசதியை Off செய்யவும்.
Use Nighttime Dark mode:
இரவு நேரத்தில் டார்க் மோடு Option-ஐ பயன்படுத்தினால் தேவையில்லாமல் இரவில் அதிகமாக பயன்படுத்தப்படும் Power – ன் அளவை குறைக்கலாம்.
மேலே கூறிய வசதிகளை பயன்படுத்துவதால் மொபைல் பேட்டரி ஆயுளை வெகுவாக அதிகரிக்க முடியும்…