Tiktok’s Master Plan | Tiktok Re Entry in India | Latest News Tamil
Tiktok’s New Plan Re entry in india:
இந்தியாவுக்குள் நுழைய Tiktokன் புதிய நரித் தந்திரம் வெற்றியடையுமா? தோல்வியடையுமா?
உலகமே கொரோனாவால் சிக்கி திணரிக் கொண்டிருக்க கடந்த மாதம் சீனா இந்திய எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பரிதாபமாக 20 இந்திய இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.
இதனால் சீனாவுக்கு எதிராக இந்தியாவில் குரல் வழுக்கத் தொடங்கியது.
India Banned 59 china apps
எனவே தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் என இந்தியா சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான 59 செயலிகளை இந்தியா தடை செய்தது.
இதில் tiktok, hello போன்ற பிரபலமான செயலிகளும் அடங்கும்.
மற்ற நாடுகளைவிட இந்தியாவில் தான் டிக்டாக் ற்கு பயனர்கள் அதிகம்.இந்தத் தடையால் இந்தியாவின் பயனர்களை டிக்டாக் இழந்தது.
சராசரியாக 20 கோடி பயனர்கள் உள்ளன.இதனால் டிக்டாக்கின் தாய் நிறுவனமான byetedance ற்கு 45,000 கோடி இழப்பு எனக் கணிக்கப்பட்டிருந்தது.
Tiktok Alternative apps released in India
இந்தியாவில் tiktok தடை செய்யப்பட்டதையடுத்து சந்தையில் மாற்று செயலிகள் அதன் பயனர்களைத் தங்களது செயலிகளுக்குக் கொண்டு வர அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட chingari, mitron போன்ற செயலிகளும் அடங்கும்.
மேலும் இதையும் படிக்க: Tiktok Alternative apps
Tiktok it is doubtful whether the new plan will succeed or fail
தற்போது byetedance நிறுவனம் சீனாவிடமிருந்து விலகி வேறொரு நாட்டில் அதன் தலைமை இடத்தை அமைக்க இருப்பாத கூறப்படுகிறது.
டிக்டாக் செயலியின் வியாபாரத்தை கருத்தில் கொண்டு நிர்வாக அமைப்பில் பல மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படுகிறது.
தங்களின் பயனர்களின் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியான தளத்தை உருவாக்குவதே தங்களின் முதன்மையான குறிக்கோள் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
Tiktok ன் இந்தப் புதிய திட்டம் பலன் அளிக்குமா? பலன் அளிக்காதா என்பது கேள்விக் குறியே?
Tiktok banned America
தற்போது அமெரிக்காவிலும் Tiktok ஐ தடை செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தங்களின் கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்…