இந்தியாவில் இளைஞர்களின் மோகம் பைக் ரைட் செல்வதில் தான் உள்ளது.அதிலும் நீண்ட நெடிய தூர பயணங்களை பலரும் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு நாளும் பயண விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.குறிப்பாக தென்னிந்திய இளைஞர்கள் இந்தியாவின் வடக்கு மாநிலங்களான லடாக், ஜம்மு காஷ்மீர், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்ல விரும்புகின்றனர்.
இந்த செய்தியை படிக்கும் சிலருக்கு சாலை பயணம் அதுவும் குறிப்பாக பைக்கில் செல்வது பிடிக்கும் என்றால் இந்த நாடுகளுக்கு நீங்கள் பைக்கிலேயே சென்று வரலாம்.அதிலும் சில நாடுகளில் இந்திய டிரைவிங் லைசென்ஸ் போதுமானது.
நேபாளம்:



உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை கொண்டுள்ள நாடு நேபாளம்.இயற்கை அழகுடன், புத்த மடாலயங்களும், குளிரான வானிலையும், பனி மூடிய சிகரங்களையும் கொண்டுள்ளது.
டெல்லியில் இருந்து 1125 கி.மீ தொலைவில் உள்ள காத்மண்டுவிற்கு உத்திரபிரதேசம், சஉனஎளலஇ வழியாக நேபாளத்திற்கு செல்லலாம்.இங்கு சுற்றி பார்க்க எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை, விசாவும் தேவையில்லை. இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதும்.
பங்களாதேஷ்:



கலாச்சாரங்கள் நிறைந்த பங்களாதேஷ் பல வரலாற்று சின்னங்கள், கோட்டைகள், கோவில்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆடுகளுக்கு பெயர் பெற்றது.
டெல்லியில் இருந்து 1850கி.மீ தொலைவில் உள்ளது பங்களாதேஷ்.இந்த நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமம் செல்லும்.மேலும் உங்களுடைய வாகனத்திற்கு இந்திய ஆட்டோமொபைல் சங்கத்தில் வழங்கப்படும் கார்டன் (Entry) அவசியம்.பங்களாதேஷின் தூதரகம் மூலம் விசா பெற்றுக் கொள்ளலாம்.
மியான்மர்:



பிரமிக்க வைக்கும் இயற்கை பாதைகள், மலைத்தொடர்கள் மற்றும் செழிப்பான நகரங்களை கொண்டுள்ளது மியான்மார்.டெல்லியில் இருந்து 2950கி.மீ தொலைவில் மியான்மார் உள்ளது.
மியான்மரில் MMT அனுமதியும், விசாவும் தேவை.
பூட்டான்:



உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று பூட்டான். இந்த நாடு உலகில் உள்ள பெரும்பாலான பயண விரும்பிகளை ஈர்க்கிறது.பூட்டான் மகிழ்ச்சியான நாடு மட்டுமல்லாமல் வளமான இயற்கை அழகையும் கொண்டுள்ளது.
டெல்லியில் இருந்து 1546கி.மீ தொலைவில் உள்ள கிம்ப் பகுதிக் செல்ல வேண்டும்.உங்களுக்கும் உங்களுடைய வாகனத்திற்கு பயண அனுமதி சீட்டு பெற வேண்டும்.மேலும் இந்திய பாஸ்போர்ட் தேவைப்படும்.
தாய்லாந்து:



அடர்ந்த காடுகள், அழகிய கடற்கரைகள், பவளப்பாறைகள், புத்த துறவிகள், பழங்கால படங்கள் போன்றவற்றை அடக்கியது தாய்லாந்து.
டெல்லியில் இருந்து 4,198கி.மீ தொலைவில் உள்ளது பாங்காக்.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வழியாக செல்ல வேண்டும்.இங்கு சர்வதேச ஓட்டுநர் உரிமமும், விசாவும் தேவை.
வியட்நாம்:



பசுமையான நிலப்பரப்பு, கடற்கரைகள், இயற்கை அழகு நிறைந்த நாடான வியட்நாம் அனைவரையும் கவரக்கூடிய ஒரு புத்துணர்ச்சி மிகுந்த நாடு.
டெல்லியில் இருந்து 5,160கி.மீ பயணித்து வியட்நாமின் ஹனஓவஐ அடைய வேண்டும்.இங்கு சர்வதேச ஓட்டுநர் உரிமமும், கார்னெட் மற்றும் இ-விசா தேவை.
துருக்கி:



ஷாப்பிங் மால்கள், கஃபேக்கள், நபர்கள் மற்றும் பல சுற்றுலா தலங்களை கொண்டது துருக்கி.
டெல்லியில் இருந்து 4,546கி.மீ தொலைவில் உள்ள இஸ்தான்புல்லை அடையவேண்டும்.இங்கு சர்வதேச ஓட்டுநர் உரிமமும், கார்னெட்+ ஒரு சிறப்பு அனுமதியும் தேவைப்படும்.