ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் எனும் லண்டனைச் சேர்ந்த நிறுவனம் உலகில் உள்ள Passport-களில் எந்த நாட்டின் பாஸ்போர்ட் சக்திவாய்ந்தது என ஆராய்ந்து 2023-கான அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகில் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் அந்த நாட்டில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா தேவை.விசா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது.
ஆனால் சில நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருந்தால் விசா இல்லாமல் பாஸ்போர்ட் மட்டும் வைத்து மற்ற நாடுகளுக்கு செல்ல முடியும்.
அப்படி எந்த நாட்டினுடைய பாஸ்போர்ட் வைத்து அதிகமான நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியுமோ அந்த Passport சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதில் முதல் இடத்தில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகள் உள்ளன.இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்து 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
இரண்டாவது இடத்தில் South Korea உள்ளது.இந்த பாஸ்போர்ட் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கும்.
மூன்றாவது இடத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகள் உள்ளன.இந்த நாட்டுகளின் கடவுச்சொல் வைத்து 191 நாடுகளுக்கு செல்ல முடியும்.
நான்காவது இடத்தில் பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் நாடுகள் உள்ளன.இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 190 நாடுகளுக்கு செல்லலாம்.
ஐந்தாவது இடத்தில் Austria, Denmark, Netherlands மற்றும் Sweden நாடுகள் உள்ளன.இந்த நாடுகளின் கடவுச்சொல்லை வைத்து 189 நாடுகளுக்கு செல்ல முடியும்.
ஆறாவது இடத்தில் France, Ireland, Portugal மற்றும் United Kingdom நாடுகள் உள்ளன.இந்த நாடுகளின் கடவுச்சொல்லை வைத்து 188 நாடுகளுக்கு செல்ல முடியும்.
ஏழாவது இடத்தில் Belgium, Czech republic, New Zealand, Norway Switzerland மற்றும் United States நாடுகள் உள்ளன.இந்த நாடுகளின் கடவுச்சொல்லை வைத்து 187 நாடுகளுக்கு செல்ல முடியும்.
எட்டாவது இடத்தில் Australia, Canada, Greece, Malta நாடுகள் உள்ளன.இந்த நாடுகளின் கடவுச்சொல்லை வைத்து 187 நாடுகளுக்கு செல்ல முடியும்.
ஒன்பதாவது இடத்தில் Hungary மற்றும் Poland நாடுகள் உள்ளன.இந்த நாடுகளின் கடவுச்சொல்லை வைத்து 185 நாடுகளுக்கு செல்ல முடியும்.
பத்தாவது இடத்தில் Lithuania மற்றும் Slovakia நாடுகள் உள்ளன.இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்து 184 நாடுகளுக்கு செல்ல முடியும்.
இதில் இந்தியா 87 இடத்தில் உள்ளது.இந்திய பாஸ்போர்ட் வைத்து 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
மேலும் சில நாடுகளின் தரவரிசை கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


